வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென் மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர் ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால் ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே
வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ