வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர் வாழ்க்கைஅபி மானம்எங்கே மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ மன்னன்அர சாட்சிஎங்கே ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த நான்முகன் செய்கைஎங்கே நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை நவின்றிடும் ஒழுக்கம்எங்கே ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர இலக்கம்உறு சிங்கமுகனை எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை ஈந்துபணி கொண்டிலைஎனில் தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே