வானும் வையமும் அளிக்கினும் உன்பால் மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார் நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின்னருள் நலம்பெற விழைதல் கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில் குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும் தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன் சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே டீயஉம -------------------------------------------------------------------------------- கழிபகற் கிரங்கல் பொது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால் நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே