வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல் வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான் ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய் மானை நோக்கிய நோக்குடை மலையாள் மகிழ மன்றிடை மாநடம் புரிவோய் தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே