வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன் ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான் சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார் ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான் சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ