வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத் தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல் ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன் நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்