வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள் மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம் ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச் சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே