வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த் தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும் நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே