வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ பாழான மந்தையர்பால் சிந்தை வைக்கும் பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான இன்பமே என்அரசே இறையே சற்றும் தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே
வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால் வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள் தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய் சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே