விடங்க லந்தருள் மிடறுடை யவனே வேதன் மால்புகழ் விடையுடை யவனே கடங்க லந்தமா உரியுடை யவனே இடங்க லந்தபெண் கூறுடை யவனே எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே திடங்க லந்தகூர் மழுவுடை யவனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே