விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் வேற்கை மகனை விரும்பிநின்றோர் வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி வதிவா ரென்றன் மனையடைந்தார் தண்டங் கழற்கு நிகரானீர் தண்டங் கழற்கென் றேன்மொழியாற் கண்டங் கறுத்தா யென்றார்நீர் கண்டங் கறுத்தீ ரென்றேனே