விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில் வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் றோகாய் நாமே தொண்டரென்றார் அண்டர்க் கரியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில் வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ