விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர் மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன் குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன் அருளக் குறித்திலையேல் பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே
விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர் மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன் குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்()அருளக் குறித்திலையேல் பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என் பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக் கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே