விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக் குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன் மாய மேபுரி பேயரில் பெரியேன் பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன் பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே