வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால் சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே