Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1966
- ) 
 காப்பு 
 நேரிசை வெண்பா 
 முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே - என்னவனே()
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்
பாடல் எண் :2070
- ) 
 காப்பு 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்

துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற

கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள்நிறைந்த மறையமுதம் -பாழிகின்ற

மலர்வாயோய் பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்

கசிந்துருக்கும் வடிவத் தோயே  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2171
- ) 
 கட்டளைக் கலித்துறை 
 துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே
பாடல் எண் :2403
- ) 
 புள்ளிருக்குவேளூர் 
 கட்டளைக் கலித்துறை 
 வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே
பாடல் எண் :2418
- ) 
 புள்ளிருக்குவேளூர் 
 பன்னிருசீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள் உந்தியே வைகுந்தம்மேல்

ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ் ஊறலே அமுதம்அவர்தம் 
பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள் பார்வையே கருணைநோக்கம்

பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே பரமசுக மாகும்இந்த
யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர் உறுசுவைப் பழம்எறிந்தே

உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல் லோரைநிந் திப்பர்அவர்தம்
வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே ,
பாடல் எண் :2430
- ) 
 புள்ளிருக்குவேளூர் சிந்து 
 பல்லவி 
 நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து 
 கண்ணிகள்
பாடல் எண் :2460
- ) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே
பாடல் எண் :2471
- ) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே
பாடல் எண் :2474
- ) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே
பாடல் எண் :2484
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்

ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
ஸோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்

தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்

பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்

பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே
பாடல் எண் :2487
- ) 
 திருவதிகை வீரட்டானம் 
 கலிவிருத்தம் 
 உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
பிரிய நாயகி பேரருள் நாயகி
பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம் 
 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2490
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே
பாடல் எண் :2502
- ) 
 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்

அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள

வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே

பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே

தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே
பாடல் எண் :2507
- ) 
 காப்பு 
 நேரிசை வெண்பா 
 பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
பொய்யகலப் போற்றுவம்இப் போது 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2518
- ) 
 காப்பு 
 நேரிசை வெண்பா 
 அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை
பாடல் எண் :2530
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
பெருநெடு மேனி தனிற்படப்() பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து() நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே
பாடல் எண் :2557
- ) 
 வஞ்சித்துறை
 
 ஐங்கரன் அடிமலர்
இங்குற நினைதிநின்
பொங்குறு துயரறும்
மங்கலின் மனனனே 
 
 குறள் வெண்செந்துறை
பாடல் எண் :2581
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே

அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே

ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே

சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே

மதிநதி வளர்சடை மணியே
பாடல் எண் :2591
- ) 
 காப்பு 
 
 பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம் உதவும்ஆ னந்த சிவையே

உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை உணர்த்துபே ரின்ப நிதியே
இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம் இயலுற உளங்கொள் பரையே

இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை ந்தெனை அளித்த அறிவே
கலகமுறு சகசமல இருளகல வெளியானஈ ஸ஡௰஺஢஧ூ ஸ௕ந஽ ி஢நை஧௅

கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக் கநஅமுதும் உதவு கடலே
அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும் அண்ணலார் மகிழும் மணியே

அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே
பாடல் எண் :2601
- ) 

 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 பரசிவா னந்தபரி பூரண சதானந்த பாவனா தீதமுக்த

பரமகை வல்யசை தன்யநர் களபூத பௌதிகா தாரயுக்த
சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய சாம்பவ விநாசரகித

சாஸ்வத புராதர நிராதர அபேதவா சாமகோ சரநிரூபா
துருவகரு ணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வநிமல

சுத்தநித் தியபரோ க்hநுபவ அபரோக் சோமசே கரசொரூபா
அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட் டணுவளவும் அறிகிலாத

அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே
பாடல் எண் :2611
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ()
 
 ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை

அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்

செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை

முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை

இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே
பாடல் எண் :2621
- ) 
 கட்டளைக் கலித்துறை
 
 கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே
பாடல் எண் :2631
- ) 
 கொச்சகக் கலிப்பா()
 
 வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே
பாடல் எண் :2641
- ) 
 கொச்சகக் கலிப்பா
 
 விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே
பாடல் எண் :2651
- ) 
 கலிவிருத்தம்
 
 திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
தரும வெள்விடைச் சாமிநின் நாமமே
பாடல் எண் :2663
- ) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே
பாடல் எண் :2685
- ) 
 கட்டளைக் கலித்துறை
 
 செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே
பாடல் எண் :2695
- ) 
 எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட

அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய

வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை

நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்

கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே
பாடல் எண் :2705
- ) 
 கலிநிலைத்துறை
 
 மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே
பாடல் எண் :2716
- ) 
 நேரிசை வெண்பா
 
 வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்
பாடல் எண் :2729
- ) 
 கட்டளைக் கலித்துறை
 
 நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே
பாடல் எண் :2786
- ) 
 ஆசிரியத் துறை()
 
 ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ
பாடல் எண் :2790
- ) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே
பாடல் எண் :2796
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்

சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய

கன்மனக் குரங்கனேன் அந்தோ
வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே

விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே

வள்ளலே என்பெரு வாழ்வே  
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2803
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்()
 
 உலக முஞ்சரா சரமும் நின்றுநின் றுலவு கின்றபே ருலகம் என்பதும்
கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற் கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர் இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்றநங் குருசி தம்பரம் சிவசி தம்பரம் சிவசி தம்பரம்
பாடல் எண் :2808
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்

அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா

என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்

ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே

சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :2847
- ) 
 சிந்து
 
 தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே
பாடல் எண் :2870
- ) 
 தாழிசை
 
 பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா
பாடல் எண் :2939
- ) 
 தாழிசை
 
 மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா
பாடல் எண் :2950
- ) 
 தாழிசை
 
 கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே
பாடல் எண் :2971
- ) 
 தாழிசை
 
 தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
தான்கொண்ட நாயக ராரே டி
அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
ஐய ரமுத ரழகரடி
பாடல் எண் :2977
- ) 
 சிந்து
 
 பல்லவி
 
 தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
தெண்டனிட்டே னென்று சொல்லடி 
 பல்லவி எடுப்பு
பாடல் எண் :2986
- ) 
 சிந்து
 
 பல்லவி
 
 இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
என்ன வர்மஞ் சொலையா 
 
 கண்ணிகள்
பாடல் எண் :2993
- ) 
 கொச்சகக் கலிப்பா
 
 ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே 
 தாழிசை
பாடல் எண் :2996
- ) 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
வெருவிஉட் குழைவாள் விழிகணீர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே
பாடல் எண் :3007
- ) 
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
 வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்

விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய

கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி

மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று

சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே
பாடல் எண் :3017
- ) 
 தலைமகள் பாங்கியொடு கூறல்
 
 எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
 
 விண்படைத்த பொழிற்றில்லை() அம்பலத்தான் எவர்க்கும்

மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே

பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது

பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்

கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.