அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே