கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன் தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய தில்லைப் பொதுவின் திருநடனம் காணேனோ