காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென் னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன் பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன் னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ