சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே