பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல் நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென் அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே