வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய் ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன் ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே