39 | பொதுநடம் புரிகின்ற பொருள் | 20 | 3872 - 3891 |
40. | ஆனந்தானுபவம் | 12 | 3892 - 3903 |
41. | பரசிவ நிலை | 10 | 3904 - 3913 |
42. | பேரானந்தப் பெருநிலை | 10 | 3914 - 3923 |
43. | திருவடி நிலை | 10 | 3924 - 3933 |
44. | காட்சிக் களிப்பு | 10 | 3934 - 3943 |
45. | கண்கொளாக் காட்சி | 10 | 3944 - 3953 |
46. | இறை திருக்காட்சி | 30 | 3954 - 3983 |
47. | உளம் புகுந்த திறம் வியத்தல் | 10 | 3984 - 3993 |
48. | வரம்பில் வியப்பு | 10 | 3994 - 4003 |
49. | கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் | 10 | 4004 - 4013 |
50. | ஆண்டருளிய அருமையை வியத்தல் | 10 | 4014 - 4023 |
51. | இறைவனை ஏத்தும் இன்பம் | 10 | 4024 - 4033 |
52. | பாமாலை ஏற்றல் | 12 | 4034 - 4045 |
53. | உத்தர ஞான சிதம்பரமாலை | 11 | 4046 - 4056 |
54. | செய்பணி வினவல் | 10 | 4057 - 4068 |
55. | ஆன்ம தரிசனம் | 10 | 4069 - 4078 |
56. | சுத்த சன்மார்க்க வேண்டுகோள் | 11 | 4079 - 4089 |
57. | அருள் விளக்க மாலை | 100 | 4090 - 4189 |
58. | நற்றாய் கூறல் | 10 | 4190 - 4199 |
59. | பாங்கி தலைவி பெற்றி கூறல் | 10 | 4200 - 4209 |
60. | தலைவி வருந்தல் | 24 | 4210 - 4233 |
61. | ஞான சிதம்பர வெண்பா | 9 | 4234 - 4242 |
62. | சிவபதி விளக்கம் | 10 | 4243 - 4252 |
63. | ஞானோபதேசம் | 10 | 4253 - 4262 |
64. | ஆரமுதப்பேறு | 13 | 4263 - 4275 |
65. | உபதேச வினா | 11 | 4276 - 4286< |
66. | நெஞ்சொடு நேர்தல் | 10 | 4287 - 4296 |
67. | அஞ்சாதே நெஞ்சே | 23 | 4297 - 4319 |
68. | ஆடிய பாதம் | 17 | 4320 - 4336 |
69. | அபயம் அபயம் | 16 | 4337 - 4352 |
70. | அம்பலவாணர் வருகை | 105 | 4353 - 4457 |
71. | அம்பலவாணர் ஆடவருகை | 12 | 4458 - 4469 |
72. | அம்பலவாணர் அனையவருகை | 12 | 4470 - 4481 |
73. | வருவார் அழைத்துவாடி | 5 | 4482 - 4486 |
74. | என்ன புண்ணியம் செய்தேனோ | 9 | 4487 - 4495 |
75. | இவர்க்கும் எனக்கும் | 5 | 4496 - 4500 |
76. | இது நல்ல தருணம் | 6 | 4501 - 4506 |
77. | ஆனந்தப் பரிவு | 11 | 4507 - 4517 |
78. | ஞான மருந்து | 34 | 4518 - 4551 |
79. | சிவசிவ ஜோதி | 33 | 4552 - 4584 |
80. | ஜோதியுள் ஜோதி | 30 | 4585 - 4614 |
3872 |
அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம் தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல் பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே 1 | | 3873 |
சித்தெலாம் வல்ல சித்தனே ஞான கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன் புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும் 2
|
3874 |
கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக் | நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும் புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து 3 | (258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க. |
3875 |
தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே | ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே புண்ணிய நிதியே கண்ணிய நிலையே 4
|
3876 |
அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில் | சொற்புனை மாயைக் கற்பனை கடந்த சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச் பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே 5 | (259). சற்புதர் - நல்லறிவுடையவர். |
3877 |
தத்துவ பதியே தத்துவம் கடந்த | சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர் பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து 6 | (260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு. |
3878 |
மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த | நூல்வழி காட்டி என்னுளே விளங்கும் நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும் போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே 7
|
3879 |
அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே | மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே உலப்பறு கருணைச் செல்வமே எல்லா புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே 8
|
3880 |
பரம்பர நிறைவே பராபர வெளியே | வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில் கரம்பெறு கனியே கனிவுறு சுவையே புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே 9
|
3881 |
வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி | கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி பொற்புறு பதியே அற்புத நிதியே 10 | (261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா. |
3882 |
தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் | புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் 11
|
3883 |
மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே | தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச் மேவிய நடுவில் விளங்கிய விளைவே பூவியல் அளித்த புனிதசற் குருவே 12 | (262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா. |
3884 |
வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும் | போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள் ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ் பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே 13
|
3885 |
அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை | நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம் பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே 14
|
3886 |
என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென் | அன்புடை அரசே அப்பனே என்றன் இன்புறு நிலையில் ஏற்றிய துணையே பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே 15
|
3887 |
சத்திய பதியே சத்திய நிதியே | நித்திய நிலையே நித்திய நிறைவே சித்திஇன் புருவே சித்தியின் கருவே புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப் 16
|
3888 |
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே | மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே சதத்திரு நெறியே தனிநெறித் துணையே புதப்பெரு வரமே புகற்கருந் தரமே 17
|
3889 |
கலைவளர் கலையே கலையினுட் கலையே | நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும் மலைவளர் மருந்தே மருந்துறு பலனே புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு 18
|
3890 |
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான | கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும் பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப் 19
|
3891 |
காரண அருவே காரிய உருவே | ஆரண முடியும் ஆகம முடியும் நாரண தலமே(263) நாரண வலமே பூரண ஒளிசெய் பூரண சிவமே 20 | (263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா. | |
3892 |
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம் வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264) வாணா நினக்கடிமை வாய்த்து. | 1 |
(264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா. | 3893 |
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச் சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும் ஏகா நினக்கடிமை ஏற்று. | 2 | 3894 |
மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம் யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந் தாய்க்குத் தனிஇயற்கை தான். | 3 | 3895 |
கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப் பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம் தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய் எந்தாய் கருணை இது. | 4 | 3896 |
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன் அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும் அழியாச்சிற் றம்பலத்தே யான். | 5 | 3897 |
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின் றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை நாடுகின்றேன் சிற்சபையை நான். | 6 | 3898 |
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச் சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என் குற்றம் பலபொறுத்துக் கொண்டு. | 7 | 3899 |
கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும் கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில் வான்மயத்தான் என்னை மகிழ்ந்து. | 8 |
(265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா. | 3900 |
கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம் உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம் தனைஉவந்து கொண்டான் தனை. | 9 |
(266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா. | 3901 |
தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம் மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள் மணவாளன் பாத மலர். | 10 | 3902 |
திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக் குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின் தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ் மாப்பிள்ளை பாத மலர். | 11 | 3903 |
என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின் தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச் சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை மாலைஇட்டான் பாதமலர். | 12 |
3904. |
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் 1 | | 3905 |
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம் நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம் செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம் 2
|
3906 |
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் | வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் 3
|
3907 |
என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் | பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம் சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் 4
|
3908 |
எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம் | நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம் பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம் திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம் 5
|
3909 |
இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம் | எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம் பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர் செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம் 6 | 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு. |
3910 |
சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம் | மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம் ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம் தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம் 7
|
3911 |
தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் | மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம் தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம் 8
|
3912 |
எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம் | அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம் ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம் செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம் 9
|
3913 |
சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம் | நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப் சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம் 10
| |
3914. |
அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே 1 | | 3915 |
திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும் உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 2
|
3916 |
துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் | மதிவளர் மருந்தே மந்திர மணியே கதிதரு துரியத் தனிவெளி நடுவே பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே 3
|
3917 |
சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ் | நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத் பாருறும் உளத்தே இனித்திட எனக்கே 4
|
3918 |
உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | வரைவளர் மருந்தே மவுனமந் திரமே நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில் பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே 5
|
3919 |
மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | கால்வளர் கனலே கனல்வளர் கதிரே ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே 6 <
|
3920 |
இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும் மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல் பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே 7
|
3921 |
அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப் மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில் பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 8
|
3922 |
வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே 9
|
3923 |
தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் | நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே 10
| |
3924. |
உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் அலகுகாண் பரிய பெரியகூட் டத்த விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் 1 | | 3925 |
தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற் 2
|
3926 |
அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் | படர்தரு விந்து பிரணவப் பிரமம் சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே 3
|
3927 |
இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் | மகத்துழல் சமய வானவர் மன்றின் புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் 4
|
3928 |
பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம் | மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா என்வணச் சோதிக் கொடிபர நாதாந் தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத் 5
|
3929 |
மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான் | அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின் கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும் நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று 6
|
3930 |
தொகையள விவைஎன் றறிவரும் பகுதித் | வகையொடு விரியும் உளப்பட ஆங்கே தகையுறு முதலா வணங்கடை யாகத் சிகையுற உபயம் எனமன்றில் ஆடும் 7
|
3931 |
மன்றஓங் கியமா மாயையின் பேத | ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில் 8
|
3932 |
பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப் | ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும் 9
|
3933 |
பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப் | உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர் திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற 10
| |
3934. |
அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை 1 | | 3935 |
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப் காலானைக் கலைசாகாத் தலையி னானைக் மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட 2
|
3936 |
உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண | கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக் தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத் எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட 3
|
3937 |
உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை | மறவானை அறவாழி வழங்கி னானை திறவானை என்னளவில் திறந்து காட்டிச் இறவானைப் பிறவானை இயற்கை யானை 4
|
3938 |
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை | மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை சகத்தானை அண்டமெலாம் தானா னானைத் இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் 5
|
3939 |
செய்யானைக் கரியானைப் பசுமை யானைத் | மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை 6
|
3940 |
மருந்தானை மணியானை வழுத்தா நின்ற | விருந்தானை உறவானை நண்பி னானை பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப் இருந்தானை இருப்பானை இருக்கின் றானை 7
|
3941 |
ஆன்றானை அறிவானை அழிவி லானை | மூன்றானை இரண்டானை ஒன்றானானை தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச் ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை 8
|
3942 |
தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால் | வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை 9 | (268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க. |
3943 |
நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை | நின்றானைப் பொன்றாத நிலையி னானை ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை என்றானை என்றும்உள இயற்கை யானை 10
| |
3944. |
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத் கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும் எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே 1 | | 3945 |
விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம் தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச் தரித்தானைத் தானேநா னாகி என்றும் எரித்தானை என்உயிருக் கின்பா னானை 2 | (269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு. |
3946 |
நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே | தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத் ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள் எட்டானை என்னளவில் எட்டி னானை 3
|
3947 |
சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத் | காற்றானை வெளியானைக் கனலா னானைக் தோற்றானை நான்காணத் தோற்றி னானைச் ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை 4 | (270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே. |
3948 |
சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு | ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப் ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை 5
|
3949 |
முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே | களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக் விளையானைச் சிவபோகம் விளைவித் தானை இளையானை மூத்தானை மூப்பி லானை 6
|
3950 |
புயலானை மழையானை அதிர்ப்பி னானைப் | செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத் அயலானை உறவானை அன்பு ளானை இயலானை எழிலானைப் பொழிலா னானை 7
|
3951 |
தாயானைத் தந்தைஎனக் காயி னானைச் | மேயானைக் கண்காண விளங்கி னானை வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை ஏயானைத் துரியநடு விருக்கின் றானை 8
|
3952 |
தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத் | குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக் அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை 9
|
3953 |
உடையானை அருட்சோதி உருவி னானை | கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை இடையானை என்னாசை எல்லாந் தந்த 10
| |
3954. |
அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான 1 | | 3955 |
துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத் என்பொலா மணியை என்சிகா மணியை அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த 2
|
3956 |
சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச் | பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப் மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட 4 | (271). 271. சிதம் - ஞானம் |
3957 |
உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த | புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த 4
|
3958 |
புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட | சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட மல்லிகை மாலை அணிந்துளே கலந்து எல்லியும் இரவும் என்னைவிட் டகலா 5
|
3959 |
பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய் | நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி எண்ணிய படியே எனக்கருள் புரிந்த தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத் 6
|
3960 |
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் | தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த வண்மையை அழியா வரத்தினை ஞான உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள் 7
|
3961 |
ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் | சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் நீதியை எல்லா நிலைகளும் கடந்த ஓதியை ஓதா துணர்த்திய வெளியை 8
|
3962 |
என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி | பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் 9
|
3963 |
புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில் | கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே தன்னிக ரில்லாத் தலைவனை எனது 10
|
3964 |
ஏங்கலை மகனே தூங்கலை எனவந் | ஓங்கிய எனது தந்தையை எல்லாம் பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப் தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத் 11
|
3965 |
துன்புறேல் மகனே தூங்கலை எனஎன் | அன்புளே கலந்த தந்தையை என்றன் இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி வன்பிலாக் கருணை மாநிதி எனும்என் 12
|
3966 |
நனவினும் எனது கனவினும் எனக்கே | மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த உனலரும் பெரிய துரியமேல் வெளியில் 13
|
3967 |
கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் | அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் 14
|
3968 |
களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக் | உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள் குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும் 15
|
3969 |
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் | பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச் 16
|
3970 |
ஆரண முடிமேல் அமர்பிர மத்தை | காரண வரத்தைக் காரிய தரத்தைக் தாரண நிலையைத் தத்துவ பதியைச் பூரண சுகத்தைப் பூரண சிவமாம் 17
|
3971 |
சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச் | தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச் சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில் வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின் 18
|
3972 |
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான | தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச் அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார 19
|
3973 |
அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும் | களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும் உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல குளவயின் நிறைந்த குருசிவ பதியைக் 20
|
3974 |
சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த | சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த் பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத் 21
|
3975 |
அடிநடு முடியோர் அணுத்துணை யேனும் | படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற் கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக் 22
|
3976 |
பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும் | நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு இயமுற வெனது குளநடு நடஞ்செய் புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப் 23
|
3977 |
கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக் | நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை 24
|
3978 |
மும்மையை எல்லாம் உடையபே ரரசை | வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம் செம்மையை எல்லாச் சித்தியும் என்பால் அம்மையைக் கருணை அப்பனை என்பே 25
|
3979 |
கருத்தனை எனது கண்அனை யவனைக் | ஒருத்தனை என்னை உடையநா யகனை அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற் நிருத்தனை எனது நேயனை ஞான 26
|
3980 |
வித்தெலாம் அளித்த விமலனை எல்லா | அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை சத்தெலாம் ஆன சயம்புவை ஞான சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந் 27 | (272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு. |
3981 |
உத்தர ஞான சித்திமா புரத்தின் | உத்தர ஞான சிதம்பர ஒளியை உத்தர ஞான நடம்புரி கின்ற உத்தர ஞான சுத்தசன் மார்க்கம் 28
|
3982 |
புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப் | நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில் மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 29
|
3983 |
பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த | கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக் புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப் தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 30
| |
3984. |
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் 1 | | 3985 |
படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப் அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும் வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர் 2
|
3986 |
உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும் | வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும் வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின் கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே 3
|
3987 |
தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் | விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன் 4
|
3988 |
இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் | மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே 5
|
3989 |
உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய் | மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன் 6
|
3990 |
மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய் | வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில் எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய் குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே 7
|
3991 |
சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும் | பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப் தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ 8
|
3992 |
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் | உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில் பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன் 9 | (273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா. | (274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
3993 |
கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல் | ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள் குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ 10
| |
3994. |
பொன்புனை புயனும் அயனும்மற் றவரும் இன்புரு வாகி அருளொடும் விளங்கி தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத் அன்பெனும் குடிசை நுழைந்தன னானால் 1 | | 3995 |
மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ 2
|
3996 |
தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் | உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ 3
|
3997 |
பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப் | ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி மேல்வகை யாதோ எனமறை முடிகள் மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான் 4
|
3998 |
வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா | பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப் உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர் கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான் 5
|
3999 |
படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும் | கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக் அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான் 6
|
4000 |
அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட | பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப் களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக் வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ 7
|
4001 |
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் | கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும் கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக் தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான் 8
|
4002 |
அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா | மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம் முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர் செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன் 9
|
4003 |
கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க் | குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால் மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன் 10
| |
4004. |
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன் தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம் மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக் 1 | | 4005 |
திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத் ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால் 2
|
4006 |
பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப் | தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம் ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக் 3
|
4007 |
மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை | துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச் விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக் 4
|
4008 |
மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள் | ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும் தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக் 5
|
4009 |
ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும் | வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச் காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக் 6
|
4010 |
திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் | அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும் பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால் 7
|
4011 |
கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும் | ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால் 8
|
4012 |
நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும் | ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம் வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால் 9
|
4013 |
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல | தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால் 10
| |
4014. |
அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே. | 1 | 4015 |
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே. | 2 | 4016 |
எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங் 3
|
4017 |
அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ | நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங் 4
|
4018 |
அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ | சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி 5
|
4019 |
மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ | பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங் 6
|
4020 |
அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ | இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி 7
|
4021 |
தடையிலா தெடுத்த அருளமு தென்கோ | அடைவுறு வயிரக் கட்டியே என்கோ உடைய மாணிக்கப் பெருமலை என்கோ இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே 8
|
4022 |
மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ | குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங் 9
|
4023 |
என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ | என்உயிர்த் தாயே இன்பமே என்கோ என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ என்ஒரு(275) வாழ்வின் தனிமுதல் என்கோ 10 | (275).என்பெரு - பி. இரா. பதிப்பு. | |
4024. |
கருணைமா நிதியே என்னிரு கண்ணே தருணவான் அமுதே என்பெருந் தாயே தெருள்நிறை மதியே என்குரு பதியே அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி 1 | | 4025 |
ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ வெட்டியே என்கோ வெட்டியில்(276) எனக்கு பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே கட்டியே என்கோ அம்பலத் தாடும் 2 | (276) கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு. |
4026 |
துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ | அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ என்பொலா மணியே என்கணே என்கோ 3
|
4027 |
கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த | ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே திருத்தனே எனது செல்வமே எல்லாம் நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ 4
|
4028 |
தாயனே எனது தாதையே ஒருமைத் | பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ தூயனே எனது நேயனே என்கோ 5
|
4029 |
அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும் | கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ 6
|
4030 |
தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த | மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த போகமுள் விரும்பும் போதிலே வலிந்து ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த 7
|
4031 |
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த | சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள் சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ 8
|
4032 |
யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில் | ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள் சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச் மாகமும் புவியும் வாழ்வுற மணிமா 9
|
4033 |
இரவிலா தியம்பும் பகலிலா திருந்த | வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்(277) திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே கரவிலா தெனக்குப் பேரருட் சோதி 10 | (277) நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. | |
4034. |
நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித் தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த நல்லான்தன் தாட்கே நயந்து. | 1 | 4035 |
சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும் வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச் சேமநட ராஜன் தெரிந்து. | 2 | 4036 |
ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம் வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த எந்தைநட ராஜன் இசைந்து. | 3 | 4037 |
இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார் ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து. | 4 | 4038 |
என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என் தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக் காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச் சாலையிலே வாஎன்றான் தான். | 5 | 4039 |
என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப் பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில் நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய் வல்லான் திருக்கருணை வாய்ப்பு. | 6 | 4040 |
முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம் அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம் பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத் தாரா வரங்களெலாம் தந்து. | 7 | 4041 |
பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில் வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ தெல்லாம் திருவருட்சீ ரே. | 8 | 4042 |
பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம் தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன் இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து. | 9 | 4043 |
நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும் ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய் புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால் எண்ணியஎல் லாம்புரிகின் றேன். | 10 | 4044 |
எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த தெள்ளமுதோ அம்பலவன் சீர். | 11 | 4045 |
ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும் தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ. | 12 |
4046. |
அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன் மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும் தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே. | 1 | 4047 |
இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில் திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே. | 2 | 4048 |
உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும் கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த் திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே. | 3 | 4049 |
பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல் தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே. | 4 | 4050 |
ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல் செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. | 5 | 4051 |
எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும் செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே. | 6 | 4052 |
குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம் பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக் கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே. | 7 | 4053 |
கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார் சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும் செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே. | 8 | 4054 |
காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம் வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே. | 9 | 4055 |
சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார் நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே. | 10 | 4056 |
ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின் மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன் தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே. | 11 |
4057. |
அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத் தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன் பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே. | 1 | 4058 |
ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே. | 2 | 4059 |
அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச் சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன் நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 3 | 4060 |
பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச் செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன் நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 4 | 4061 |
ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத் தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன் நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 5 | 4062 |
இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித் தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன் தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. | 6 | 4063 |
மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச் சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே. | 7 | 4064 |
ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித் தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன் தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. | 8 | 4065 |
ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச் சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே. | 9 | 4066 |
மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன் பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே. | 10 | 4067 |
. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன் ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே. | 11 | 4068 |
பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278 | 12 | 4067, 4068. |
இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன. | 13 |
4069. |
திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன் உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே 1 | | 4070 |
நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன் எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன் தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே 2
|
4071 |
களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே | துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் 3
|
4072 |
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் | கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 4
|
4073 |
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன் | உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன் கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே. 5
|
4074 |
திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த | உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக் கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன் அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே. 6
|
4075 |
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் | நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. 7
|
4076 |
பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ | சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச் சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன் ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 8
|
4077 |
ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும் | என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந் தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன் உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. 9
|
4078 |
கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே | உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன் ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே. 10
| |
4079 |
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் 1 | | 4080 |
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் எய்யாத(279) அருட்சோதி என்கையுறல் வேண்டும் நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும் 2 | (279). எய்யாத - அறியாத. முதற்பதிப்பு. |
4081 |
அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும் பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும் உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும் 3
|
4082 |
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும் ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் 4
|
4083 |
அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும் உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும் 5
|
4084 |
அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும் படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம் ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் 6
|
4085 |
அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும் தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் 7
|
4086 |
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் 8
|
4087 |
அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும் எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும் பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும் 9
|
4088 |
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந் பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும் 10
|
4089 |
அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் | எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும் கமையாதி(280) அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம் விமலாதி உடையஒரு திருவடிவில் யானும் 11 | (280). கமை - பொறுமை. முதற்பதிப்பு. | |
4090 |
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா 1 | | 4091 |
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 2
|
4092 |
இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே | அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே 3
|
4093 |
ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே | பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 4
|
4094 |
மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து | சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச் அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 5
|
4095 |
கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே | செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே 6
|
4096 |
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து | விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித் வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே 7
|
4097 |
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில் | விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே 8
|
4098 |
அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில் | கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும் விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் 9
|
4099 |
நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி | வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 10
|
4100 |
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா | ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச் நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 11
|
4101 |
தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது | நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன் அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும் என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே 12
|
4102 |
உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ | தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே 13
|
4103 |
நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே | பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் 14 | (281). எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க. |
4104 |
கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே | மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே 15
|
4105 |
கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே | மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே 16
|
4106 |
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் | தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின் இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே 17
|
4107 |
மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே | விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே 18
|
4108 |
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் | பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது 19
|
4109 |
உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே | பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே 20
|
4110 |
நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் | ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் 21
|
4111 |
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே | சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே 22
|
4112 |
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் | ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம் ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் 23
|
4113 |
அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி | படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல் பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப் அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே 24
|
4114 |
அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் | துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் 25
|
4115 |
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் | ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும் 26
|
4116 |
பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் | உற்றொளிகொண் டோ ங்கிஎங்கும் தன்மயமாய் ஞான சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே 27
|
4117 |
ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே | கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க் செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில் 28
|
4118 |
வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும் | ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும் போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில் 29
|
4119 |
பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் | தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம் தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும் 30
|
4120 |
மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே | ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம் தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும் 31
|
4121 |
சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் | நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய் வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும் சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில் 32
|
4122 |
சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும் | ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும் தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும் போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும் 33
|
4123 |
நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும் | ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம் பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும் 34
|
4124 |
மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள் | பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள் துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம் உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே 35
|
4125 |
விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள் | களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான் உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும் வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே 36
|
4126 |
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே | பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும் புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே 37
|
4127 |
வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள் | ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம் தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச் வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே 38
|
4128 |
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே | வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 39
|
4129 |
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் | சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய் ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே 40
|
4130 |
திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் | விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில் 41
|
4131 |
கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும் | சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம் ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய் 42
|
4132 |
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் | ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் 43
|
4133 |
தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்(282) தில்லைத் | வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் 44 | (282). தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க. |
4134 |
ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே | தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில் 45
|
4135 |
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் | பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில் 46
|
4136 |
ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் | பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம் திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச் கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில் 47
|
4137 |
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே | பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப் மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே |