Vallalar.Net

திருஅருட்பா ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)

113. அம்பலத்தரசே

நாமாவளி

சிந்து

5064. சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா.
1
5065 சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374)
2
(374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும்
"அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும்
இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக
வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார்
அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு
நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும்,
அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார்.
இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக்
காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும்
காப்பாகக் கொள்ளலாம்.
5066 அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
1
5067 பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
2
5068 மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
3
5069 ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
4
5070 சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
5
5071 படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
6
5072 அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
7
5073 அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.
8
5074 அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
9
5075 தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா.
10
5076 கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.
11
5077 சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.
12
5078 இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
13
5079 என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
14
5080 ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.
15
5081 உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
16
5082 அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.
17
5083 நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
18
5084 ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
மானந்த போனகம் கொண்டோ மே.
19
5085 சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.
20
5086 சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
21
5087 சங்கர சிவசிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
22
5088 அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
23
5089 நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.
24
5090 நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.
25
5091 உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
26
5092 நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே.
27
5093 அருட்பொது நடமிடு தாண்டவ னே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
28
5094 நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
29
5095 நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே.
30
5096 நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
31
5097 சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
32
5098 அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
33
5099 அம்பல வாணனை நாடின னே
அவனடி யாரொடும் கூடின னே.
34
5100 தம்பத மாம்புகழ் பாடின னே
தந்தன என்றுகூத் தாடின னே.
35
5101 நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
ஞான சிதம்பர நாட்டா ரே.
36
5102 இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
என்குரு மேல்ஆணை இட்டே னே.
37
5103 இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
38
5104 சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
39
5105 நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நடராஜ ரேசபா நாயக ரே.
40
5106 நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
41
5107 நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
நல்வரம் ஈயும் தயாநிதி யே.
42
5108 நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே.
43
5109 சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
44
5110 சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
45
5111 இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.
46
5112 என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.
47
5113 சிற்சபை அப்பனை உற்றே னே
சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
48
5114 அம்பல வாணர்தம் அடியவ ரே
அருளர சாள்மணி முடியவ ரே.
49
5115 அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
50
5116 இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
51
5117 கருணா நிதியே குணநிதி யே
கதிமா நிதியே கலாநிதி யே.
52
5118 தருணா பதியே சிவபதி யே
தனிமா பதியே சபாபதி யே.
53
5119 கருணா நிதியே சபாபதி யே
கதிமா நிதியே பசுபதி யே.
54
5120 சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.
55
5121 கருணாம் பரவர கரசிவ பவபவ
அருணாம் பரதர ஹரஹர சிவசிவ.
56
5122 கனகா கரபுர ஹரசிர கரதர
கருணா கரபர சுரவர ஹரஹர.
57
5123 கனக சபாபதி பசுபதி நவபதி
அனக உமாபதி அதிபதி சிவபதி.
58
5124 வேதாந்த பராம்பர ஜயஜய(375)
நாதாந்த நடாம்பர ஜயஜய.
59
(375). சவுதய - ஆ. பா. பதிப்பு.
5125 ஏகாந்த சர்வேச சமோதம
யோகாந்த நடேச நமோநம.
60
5126 ஆதாம்பர ஆடக அதிசய
பாதாம்புஜ நாடக ஜயஜய.
61
5127 போதாந்த புரேச சிவாகம
நாதாந்த நடேச நமோநம.
62
5128 ஜால கோலகன காம்பர சாயக
கால காலவன காம்பர நாயக.
63
5129 நாத பாலசு லோசன வர்த்தன
ஜாத ஜாலவி மோசன நிர்த்தன.
64
5130 சதபரி சதவுப சதமத விதபவ
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.
65
5131 அரகர வரசுப கரகர பவபவ
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.
66
5132 உபல சிரதல சுபகண வங்கண
சுபல கரதல கணபண கங்கண.
67
5133 அபயவ ரதகர தலபுரி காரண
உபயப ரதபத பரபரி பூரண.
68
5134 அகரஉ கரசுப கரவர சினகர
தகரவ கரநவ புரசிர தினகர.
69
5135 வகரசி கரதின கரசசி கரபுர
மகரஅ கரவர புரஹர ஹரஹர.
70
5136 பரமமந் திரசக ளாகன கரணா
படனதந் திரநிக மாகம சரணா.
71
5137 அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
அகண்டவே தசிர கரதர பலிதா.
72
5138 பரிபூரண ஞானசி தம்பர
பதிகாரண நாதப ரம்பர.
73
5139 சிவஞானப தாடக நாடக
சிவபோதப ரோகள கூடக.
74
5140 சகல லோகபர காரக வாரக
சபள யோகசர பூரக தாரக.
75
5141 சத்வ போதக தாரண தன்மய
சத்ய வேதக பூரண சின்மய.
76
5142 வரகே சாந்த மகோதய காரிய
பரபா சாந்த சுகோதய சூரிய.
77
5143 பளித தீபக சோபித பாதா
லளித ரூபக ஸ்தாபித நாதா.
78
5144 அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா
அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.
79
(376). அனுர்த - ச. மு. க. பதிப்பு.
5145 அம்போ ருகபத அரகர கங்கர
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
80
5146 சிதம்பிர காசா பரம்பிர கா சா
சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.
81
5147 அருட்பிர காசம் பரப்பிர காசம்
அகப்பிர காசம் சிவப்பிர காசம்.
82
5148 நடப்பிர காசம் தவப்பிர காசம்
நவப்பிர காசம் சிவப்பிர காசம்.
83
5149 நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே
நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே.
84
5150 ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே.
85
5151 ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
86
5152 புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.
87
5153 நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
88
5154 நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
89
5155 நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
80

திருச்சிற்றம்பலம்
Back

114. சம்போ சங்கர

சிந்து

5156. தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
1
5157 சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.
2
5158 நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
3
5159 நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.
4
5160. உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி
உவப்புறுவேதி நவப்பெருவாதி
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி
அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
5
5161 ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
6
5162 ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
7
5163 அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
8
5164 அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
9
5165 பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.
10
5166 அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
11
5167 அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
12
5168 எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
13
5169 நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
14
5170 பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
அரஅர அரஅர அரஅர அரஅர.
15
5171 நவநிலை தருவது நவவடி வுறுவது
நவவெளி நடுவது நவநவ நவமது
சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
16
5172 சந்திர தரசிர சுந்தர சுரவர
தந்திர நவபத மந்திர புரநட
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.
17
5173 வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண
நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.
18
5174 பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ
பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி
நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர.
19
5175 பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு
பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர
சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.
20
5176 கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
21
5177 எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
22

திருச்சிற்றம்பலம்
Back

115. சிவபோகம்

சிந்து

5178. போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
1
5179 நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
2
5180 சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.
3
5181 அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
4
5182 ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.
5
5183 நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
6
5184 பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.
7
5185 ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
8
5186 ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
9
5187 அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.
10
5188 அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
11
5189 அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
12
5190 தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
13
5191 கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
14
5192 என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
15
5193 எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.
16
5194 சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
17
5195 வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
18
5196 பாசநாச பாபநாச பாததேச ஈசனே
வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
19
5197 உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
20
5198 அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
21
5199 அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
22
5200 தகரககன நடனகடன சகளவகள சரணமே
சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.
23
5201 அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
24
5202 தனககனக சபையஅபய சரதவரத சரணமே
சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.
25
5203 உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
26
5204 இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
27
5205 அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
28
5206 ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
29
5207 அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
30
5208 எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
31
(377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
5209 நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
32
5210 வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
33
5211 நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
34
5212 மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
35
5213 களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
36
5214 தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.
37
5215 எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
38
5216 சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
39
5217 வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.
40

திருச்சிற்றம்பலம்
Back

116. அம்பலத்தமுதே

கலிவிருத்தம்

5218. நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
1
5219 சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
2
5220 ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
3
5221 சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
4
5222 எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணிய வாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணிய வானே புண்ணிய வானே.
5
5223 தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே
சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
சத்திய வானே சத்திய வானே.
6
5224 எம்புலப் பகையே எம்புலத் துறவே
எம்குலத் தவமே எம்குலச் சிவமே
அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
அம்பலத் தரசே அம்பலத் தரசே.
7
5225 இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.
1

திருச்சிற்றம்பலம்
Back

117. திருநட மணியே

தாழிசை

5226. பசியாத அமுதே பகையாத பதியே
பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே
நடராஜ மணியே நடராஜ மணியே.
1
5227 புரையாத மணியே புகலாத நிலையே
புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே
நடராஜ நிதியே நடராஜ நிதியே.
2
5228 சிவஞான நிலையே சிவயோக நிறைவே
சிவபோக உருவே சிவமான உணர்வே
நவநீத மதியே நவநாத கதியே
நடராஜ பதியே நடராஜ பதியே.
3
5229 தவயோக பலமே சிவஞான நிலமே
தலையேறும் அணியே விலையேறு மணியே
நவவார நடமே சுவகார புடமே
நடராஜ பரமே நடராஜ பரமே.
4
5230 துதிவேத உறவே சுகபோத நறவே
துனிதீரும் இடமே தனிஞான நடமே
நதியார நிதியே அதிகார பதியே
நடராஜ குருவே நடராஜ குருவே.
5
5231 வயமான வரமே வியமான பரமே
மனமோன நிலையே கனஞான மலையே
நயமான உரையே நடுவான வரையே
நடராஜ துரையே நடராஜ துரையே.
6
5232 பதியுறு பொருளே பொருளுறு பயனே
பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
மறைமுடி மணியே மறைமுடி மணியே.
7
5233 அருளுறு வெளியே வெளியுறு பொருளே
அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
மருளறு தெருளே தெருளுறு மொளியே
மறைமுடி மணியே மறைமுடி மணியே.
8
5234 தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
திருவளர் உருவே உருவளர் உயிரே
திருநட மணியே திருநட மணியே.
9
5235 உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
செயிரறு பதியே சிவநிறை நிதியே
திருநட மணியே திருநட மணியே.
10
5236 கலைநிறை மதியே மதிநிறை அமுதே
கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
திருநட மணியே திருநட மணியே.
11
5237 மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
திருநட மணியே திருநட மணியே.
12
5238 இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
திருநட மணியே திருநட மணியே.
13
5239 புரையறு புகழே புகழ்பெறு பொருளே
பொருளது முடிபே முடிவுறு புணர்வே
திரையறு கடலே கடலெழு சுதையே
திருநட மணியே திருநட மணியே.
14
5240 நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே
நிறையருள் நிதியே நிதிதரு பதியே
திகழ்சிவ பதமே சிவபத சுகமே
திருநட மணியே திருநட மணியே.
10

திருச்சிற்றம்பலம்
Back

118. ஞான சபாபதியே

தாழிசை

5241. வேத சிகாமணியே போத சுகோதயமே
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
1
5242 ஏக சதாசிவமே யோக சுகாகரமே
ஏம பராநலமே காம விமோசனமே
நாக விகாசனமே நாத சுகோடணமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
2
5243 தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
3
5244 ஆரண ஞாபகமே பூரண சோபனமே
ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
நாரண னாதரமே காரண மேபரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
4
5245 ஆகம போதகமே யாதர வேதகமே
ஆமய மோசனமே ஆரமு தாகரமே
நாக நடோ தயமே நாத புரோதயமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
5
5246 ஆடக நீடொளியே நேடக நாடளியே
ஆதி புராதனனே வேதி பராபரனே
நாடக நாயகனே நானவ னானவனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
6
5247 ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
நாரிய னேவரனே நாடிய னேபரனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
7
5248 ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம வனாதியனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
8
5249 தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
தீன சகாநிதியே சேகர மாநிதியே
நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
9
5250 ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
ஆகம மேலவனே ஆரண நாலவனே
நாடிய காரணனே நீடிய பூரணனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
10

திருச்சிற்றம்பலம்
Back

119. விரைசேர் சடையாய்

சிந்து

5251. விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
1
(378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
5252 அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
2
5253 உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே.
3
(379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
5254 அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
4

திருச்சிற்றம்பலம்
Back

120. ஜோதி ஜோதி

சிந்து

5255. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
1
5256 வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
2
5257 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
3

திருச்சிற்றம்பலம்
Back

121. கண்புருவப் பூட்டு

தாழிசை

5258. கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
1
5259 சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
2
5260 ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
3
5261 ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
4
5262 மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
5
5263 துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
6
5264 சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
7
5265 சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும்(380) இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
8
(380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.
5266 வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
9
5267 அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
10
5268 நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
11
Back

122. ஊதூது சங்கே

தாழிசை

5269. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
கனக சபையான்என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
1
5270 தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.
2
5271 பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.
3
5272 அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.
4
5273 என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
5
5274 சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
6
5275 நாத முடியான்என்று ஊதூது சங்கே
ஞானசபையான்என்று ஊதூது சங்கே
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.
7
5276 தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
8
5277 என்னறி வானான்என்று ஊதூது சங்கே
எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
9
5278 இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
10
5279 கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.
11
5280 எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
12
5281 கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.
13
5282 தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.
14
5283 ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.
15
5284 பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.
16
திருச்சிற்றம்பலம்
Back

123. சின்னம் பிடி

தாழிசை

5285. அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
1
5286 சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி
சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.
2
5287 ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
3
5288 கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி
கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி.
4
5289 அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
5
5290 தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
6
5291 வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
7
5292 மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
வேதாக மம்கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
8
5293 பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
9
5294 சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
இதுவே தருணம்என்று சின்னம் பிடி.
10

திருச்சிற்றம்பலம்
Back

124. முரசறைதல்

தாழிசை

5295. அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
1

திருச்சிற்றம்பலம்
Back

125. தனித் திருஅலங்கல் (381)

    (381) இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள். ஆறாந்
    திருமுறைக் காலத்தில் பல சமயங் களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில் இவை தனிப் பாடல்கள்
    என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில் உள்ளன. ஆ. பா. இவற்றைத்
    தனித்திருஅலங்கல்,< ா௉஢௲ா஢௕௲ ஦ா஡ந஼, ா௉஢௲ா஢௕ ு஡ந௄ ற௉ ௣௽௚
    கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை, முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளார்.
    இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள் வரிசையில் முன் பின்னாக அமைக்கப் பெற்று
    இவண் வைக்கப்பட்டுள்ளன.

ஆன்மநேய ஒருமைப்பாடு (382)

(382). இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்
5296. எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
செயல்எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
வாய்மிகவும் ஊர்வ தாலோ.
1
5297 எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
2
5298 கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள்என் றறைவ ராலோ.
1
சாலையப்பனை வேண்டல்

கொச்சகக் கலிப்பா
5299 மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
1
கட்டளைக் கலித்துறை
5300 ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
5
5301 அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
6
5302 வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
7
5303 மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
8
5304 எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
9
5305 ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
1
மாயை நீக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5306 அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
11
5307 மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
12
5308 தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
13
சிதம்பரேசன் அருள்

கலி விருத்தம்
5309 சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
14
5310 என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
15
5311 மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
16
போற்றிச் சந்த விருத்தம்

சந்த விருத்தம்
5312 போற்றி நின்அருள் போற்றி நின்பொது
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
போற்றி நின்முடி போற்றி நின்நடு
போற்றி நின்அடி போற்றி போற்றியே.
17
5313 போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
போற்றி நின்வரம் போற்றி நின்கதி
போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
போற்றி நின்தயை போற்றி நின்கொடை
போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
18
5314 போற்று கின்றஎன் புன்மை யாவையும்
பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
காணக் காட்டிய கருத்த போற்றிவன்
கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
19
பாடமும் படிப்பும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5315 அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
20
5316 கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
அள்ளக் குறையா வள்ளற் பொருளை
அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
21
5317 காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
ஐயர் திருவடிக் கானந்த மாகப்
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
22
பாட்டும் திருத்தமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5318 தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
23
5319 ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
24
அம்பலத்தரசே அபயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5320 பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
செல்வமே நான்பெற்ற சிறப்பே
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
வாழ்வித்த என்பெரு வாழ்வே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
25
5321 பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
தேடியும் காண்கிலாச் சிவமே
மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
வள்ளலே தெள்ளிய அமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
26
5322 பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
புகன்றபோ தாந்த நாதாந்தம்
தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
தத்தினும் தித்திக்கும் தேனே
மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
மாபெருங் கருணையா ரமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
27
அருட்பெருஞ்சோதி அபயம்

நேரிசை வெண்பா
5323 அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
சோதி அபயம் துணை.
28
5324 துணைவா அபயம் துயர்அகல என்பால்
அணைவா அபயம் அபயம் - பணைவாய்
வடலா அபயம் வரதா அபயம்
நடநாய காஅபயம் நான்.
29
5325 நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
ஐயா அபயமப யம்.
30
5326 அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் - உபய
பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
விதத்தில் கருணை விளை.
31
5327 கருணா நிதியே அபயம் கனிந்த
அருணா டகனே அபயம் - மருணாடும்
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
பொள்ளற் பிழைகள் பொறுத்து.
32
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5328 இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
பிணக்கறிவீர் புரட்டறிவீர்(383) பிழைசெயவே அறிவீர்
பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
33
(383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
5329 உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
குழக்கறியே(384) பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
34
(384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5330 உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும்
பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும்
ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
பிணிக்கும் பீடைக்கும் உடலுளம்
கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
பணிக்கும் வேலைசெய் துண்டுடுத்
தம்பலம் பரவுதற் கிசையீரே.
35
5331 மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி
இருபிடிஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங்
கவற்றைஎலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும்
மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும்
கொடுத்திழப்பர் என்னே என்னே.
36
5332 கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க
எனக்கழறிக் களிக்கா நின்ற
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும்
கணச்சுகமே சொல்லக் கேண்மின்
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால்
சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ
எமையும்இவ்வா றிடுகஎன்றே.
37
5333 மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப்
பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு
கிடந்தழுது விளைவிற் கேற்பக்
கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை
மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா
மணித்தேவைத் துதியார் அன்றே.
38
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5334 சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
சிறியவர் சிந்தைமாத் திரமோ
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
இனிப்பிலே புகுகின்ற திலையே.
39
கலிநிலைத்துறை
5335 பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
40
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5336 நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
நான்செயத் தக்கதே தென்பாள்
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
தெய்வமே தெய்வமே என்பாள்
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
விருப்பிலர் என்மிசை என்பாள்
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
வருந்துவாள் நான்பெற்ற மகளே.
41
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5337 நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
42
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 33
5338. அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற
அரசேநின் அடிமேல் ஆணை
என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத்
திடமுடியா திதுகால் தொட்டுப்
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு
நீதானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும்
மாஇருக்க ஒண்ணா தண்ணா.
43
5339. முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே
உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில்
இலைஅதனால் எல்லாம் வல்லோய்
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய்
அருட்சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா
டுண்டோ நீ உரைப்பாய் அப்பா.
44
5340.. உன்ஆணை உன்னைவிட உற்றதுணை
வேறிலைஎன் உடையாய் அந்தோ
என்நாணைக் காத்தருளி இத்தினமே
அருட்சோதி ஈதல் வேண்டும்
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த
பெருங்கருணை அரசே என்னை
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த
இந்நாள்என் மொழிந்தி டாதே.
45
5341. தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்
தெனைஆண்ட துரையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட
பதியேகால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும்
தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
தாங்காதே இதுநினது தனித்ததிரு
வுளமறிந்த சரிதம் தானே.
46
5342. இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட்
டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம்
தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள்
எங்குளர்காண் பதியே என்னை
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்
பிள்ளைஎன மதித்தி டாயே.
47
5343. சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர்
பலபுகலத் தினந்தோ றுந்தான்
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப்
பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற்
றிடஅழியாத் தேகன் ஆகப்
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப்
புரிகஎனைப் பெற்ற தேவே.
48
கலிநிலைத்துறை
5344 அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
49
5345 ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.
50
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5346 உடைய நாயகன் பிள்ளைநான்
ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
அடைய நான்அருட் சோதிபெற்
றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
மிடைய அற்புதப் பெருஞ்செயல்
நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
தடைய தற்றநல் தருணம்இத்
தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
51
5347 கோது கொடுத்த மனச்சிறியேன்
குற்றம் குணமாக் கொண்டேஇப்
போது கொடுத்த நின்அருளாம்
பொருளை நினைக்கும் போதெல்லாம்
தாது கொடுத்த பெருங்களிப்பும்
சாலா தென்றால் சாமிநினக்
கேது கொடுப்பேன் கேட்பதன்முன்
எல்லாம் கொடுக்க வல்லாயே.
52
5348 கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும்
அன்பரெலாம் காணக் காட்டும்
என்றுடைய நாயகனே எல்லாஞ்செய்
வல்லவனே இலங்குஞ் சோதி
மன்றுடைய மணவாளா மன்னவனே
என்னிருகண் மணியே நின்னை
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல்
ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
53
5349 திருநி லைத்துநல் அருளொடும்
அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
உருநி லைத்திவண் மகிழ்வொடு
வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
இருநி லத்தவர் இன்புறத்
திருவருள் இயல்வடி வொடுமன்றில்
குருநி லைத்தசற் குருஎனும்
இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
54
5350 குற்றம் புரிதல் எனக்கியல்பே
குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன்
செப்பும் முகமன் யாதுளது
தெற்றென் றடியேன் சிந்தைதனைத்
தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
இற்றைப் பொழுதே அருட்சோதி
ஈக தருணம் இதுவாமே.
55
5351 அருளா ரமுதே என்னுடைய
அன்பே என்றன் அறிவேஎன்
பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப்
புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
தெருளாம் ஒளியே வெளியாகச்
சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
இருளா யினஎல் லாம்தவிர்த்தென்
எண்ணம் முடிப்பாய் இப்போதே.
56
5352 மந்திரம் அறியேன் மற்றை
மணிமருந் தறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத்
தகவுகொண் டடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர்
இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத்
தனிநடம் புரியும் தேவே.
57
5353. கருணைக் கடலே அதில்எழுந்த
கருணை அமுதே கனியமுதில்
தருணச் சுவையே சுவைஅனைத்தும்
சார்ந்த பதமே தற்பதமே
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம்
பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும்
சித்தி நிலைகள் தெரித்தருளே.
58
5354. கலக்கம் அற்றுநான் நின்றனைப்
பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
இலக்கம் உற்றறிந் திடஅருள்
புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
துலக்க முற்றசிற் றம்பலத்
தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
அலக்கண் அற்றிடத் திருவருள்
புரியும்என் அப்பனே அடியேற்கே.
59
கட்டளைக் கலிப்பா
5355 பண்டு நின்திருப் பாதம லரையே
பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
60
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5356 கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
கருணைமா மழைபொழி முகிலே
விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
இன்றுநீ ஏழையேன் மனத்துப்
புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
புகுந்தென துளங்கலந் தருளே.
61
5357 அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
அன்றுவந் தாண்டனை அதனால்
துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
சொல்லினேன் சொல்லிய நானே
இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
எனைஉல கவமதித் திடில்என்
என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
எய்துக விரைந்தென திடத்தே.
62
கட்டளைக் கலித்துறை
5358 வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
63
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5359 செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
எந்தைநின் திருவருள் திறத்தை
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
என்தரத் தியலுவ தேயோ
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
64
5360 உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
சிவபதத் தலைவநின் இயலைப்
புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
குருஎனக் கூறல்என் குறிப்பே.
65
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5361 அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
66
5362 கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
67
5363 என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
68
5364 இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
69
5365 தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
70
5366 வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
தந்தை நீதரல் சத்தியம் என்றே
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
செய்க வாழ்கநின் திருவருட் புகழே. .
71
5367 வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே. .
72
குறட்டாழிசை.
5368 அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். .
73
நேரிசை வெண்பா.
5369 இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
அன்னியனே அல்லேன் அறிந்து. .
74
கலித்துறை.
5370 ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. .
75
கட்டளைக் கலித்துறை.
5371 போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. .
76
5372 அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. .
77
5373 மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. .
78
தரவு கொச்சகக் கலிப்பா.
5374 ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. .
79
5375 அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. .
80
5376 கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
81
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம�