அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன் நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன் நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன் மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே