அகத்தானைப் புறத்தானை அணுவா னானை அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற சகத்தானை அண்டமெலாம் தானா னானைத் தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே