அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும் இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே