அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர் சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே உகத்தென() துடல்பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே () உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு