அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே அடுத்திடும் புறப்புறம் நான்கில் இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால் இறையும்இங் கெண்ணிய துண்டோ உகந்தநின் பாதம் அறியநான் அறியேன் உறுகணிங் கினிச்சிறி துந்தான் இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங் கென்னைஆண் டருள்வ துன்கடனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- கைம்மாறின்மை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்