அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே சகவடிவில் தானாகி நானாகி நானும் தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே