அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன் ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன் மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல் வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச் செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்