அங்கலிட்ட() களத்தழகர் அம்பலவர் திருத்தோள் ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார் பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள் எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும் சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே () அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் பொருள்கொள்க - முதற்பதிப்பு இருள் - நஞ்சு