அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல் இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண் என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே