அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும் எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே