பாடல் எண் :4355
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
அந்தண ரேஇங்கு வாரீர்
அம்பலத் தையரே வாரீர் வாரீர்
பாடல் எண் :4581
அச்சம் தவிர்த்தமெய் ஸோதி - என்னை
ஆட்கொண் டருளிய அம்பல ஸோதி
இச்சை எலாம்தந்த ஸோதி - உயிர்க்
கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஸோதி சிவசிவ
பாடல் எண் :5045
அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5272
அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.