அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ அம்பலத் தெம்பிரான் என்கோ நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ நீடும்என் நேயனே என்கோ பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ பெரியரிற் பெரியனே என்கோ இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங் கென்னைஆண் டருளிய நினையே