அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே