அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான் எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம் மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே