அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய் தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே தனிநட ராசஎன் சற்குரு மணியே