அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே அன்பினால் அணைத்தருள் என்றாள் பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம் படமுடி யாதெனக் கென்றாள் செஞ்செவே எனது கருத்தெலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே