அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில் செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந் திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய் துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே