அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரைபரம் பரன்எனும் இவர்கள் சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே ஏத்துவன் திருவடி நிலையே