அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும் விடலை எனமு வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே நடலை உலக நடைஅளவற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக் கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே திருச்சிற்றம்பலம் பணித்திறஞ் சாலாமை கலி விருத்தம் திருச்சிற்றம்பலம்