அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல் அடிநடு முடியிலா ததுஇது மகனே படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய் செடியற உலகினில் அருள்நெறி இதுவே செயலுற முயலுக என்றசிற் பரமே தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே