அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும் துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும் ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே