அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல் பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப் பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே