அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக் கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே