அடிநடு முடியோர் அணுத்துணை யேனும் அறிந்திடப் படாதமெய் அறிவைப் படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த பதியிலே விளங்குமெய்ப் பதியைக் கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற் கடைக்கணித் தருளிய கருணைக் கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக் கோயிலில் கண்டுகொண் டேனே