அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா தாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப் படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில் படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப் பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய் பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும் பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே