அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர் படிவ மாகும்ப டம்பக்க நாதரே நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர் மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ
அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும் நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார் கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே